கருவேலங்காடு அரசியலை சொல்லும் இராவணக் கோட்டம்

துபாய்: சாந்தனு, ஆனந்தி நடித்துள்ள இராவணக் கோட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்றது.  மதயானைக் கூட்டம் படத்தை இயக்கியவர் விக்ரம் சுகுமாறன். அவரது அடுத்த படம் இராவணக் கோட்டம். கண்ணன் ரவி தயாரித்துள்ளார். பிரபு, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார்.

துபாயில் நடந்த இசை விழாவில் பங்கேற்று விக்ரம் சுகுமாறன் பேசியது:

இந்த படம் ஆரம்பித்த முதலே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் வறண்ட பூமியில் படமாக்கினோம். படப்பிடிப்பு நடந்த சமயம், கடும் வெயில். பலருக்கு உடல் நலம் பாதித்தது. அந்த லொகேஷன்களில் படமாக்குவதற்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையெல்லாம் தாண்டி படம் உருவாகியுள்ளது. இது கருவேலங்காடு அரசியலை பேசும் படம். 1957ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக மட்டும் கொண்டு படம் உருவாகியுள்ளது. சாந்தனு உயிரை கொடுத்து படத்திற்காக உழைத்திருக்கிறார். இதில் அவர் புதிய பரிமாணத்துக்கு மாறியுள்ளார். ஹீரோயினுக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இருப்பதால், நன்றாக நடிக்க தெரிந்த ஆனந்தியை இதில் நடிக்க வைத்திருக்கிறேன்.

பட ஹீரோ சாந்தனு பேசும்போது, ‘இதில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறேன். இதற்கு முன் எனக்கு இருந்த லவ்வர் பாய் இமேஜை இந்த படம் உடைக்கும். படம் தாமதமானாலும் தரமாக வந்திருக்கிறது. இந்த படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளால் வேறு தயாரிப்பாளராக இருந்தால், படத்தை பாதியில் விட்டு சென்றிருப்பார். ஆனால், எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி எங்களுடன் இருந்தார்’ என்றார்.‘படத்துக்கு ரூ.3.50 கோடி பட்ஜெட் திட்டமிடப்பட்டது. ஆனால், அதை தாண்டி செலவாகிவிட்டது. தலைப்பில் ராவணன் என வந்தால் அது நெகட்டிவ்வாக அமையும் என்ற சினிமா சென்டிமென்ட்டை இந்த படம் உடைக்கும். இந்த படத்தை அடுத்து மேலும் 4 படங்களை தயாரிக்க உள்ளேன்’ என தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறினார்.

விழாவில் அமைச்சர் துரைமுருகன், கலாநிதி எம்.பி., கனிமொழி சோமு எம்.பி., கே.பாக்யராஜ், பார்த்திபன், நாசர், பிரசன்னா, அசோக் செல்வன், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சுந்தர்.சி, குஷ்பு, மீனா, ராதிகா, ஆண்ட்ரியா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: