சிறுநீரக தொற்றால் சிவாங்கி ‘அட்மிட்’

மும்பை: சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் இருந்து கொண்டே வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன். மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியுடன் குணமடைந்து வருகிறேன். எனது நண்பர்களும், ரசிகர்களும் அவர்களது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் தான் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Related Stories: