சென்னை: சந்திரமுகி-2 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடித்த படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2வது பாகம் சந்திரமுகி-2 பெயரில் உருவாகி வருகிறது. இதில் வேட்டையன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். சந்திரமுகியாக கங்கனா ரனவத் நடிக்கிறார். ஹாரர் திரில்லர் படமாக இது உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு, இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.