அமெரிக்காவில் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன்

ஐதராபாத்: அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் பங்கேற்க உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரமாண்ட பேரணி நடைபெறும். இதை அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் இணைந்து ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த பேரணியில் பிரபலமான இந்திய நடிகர் அல்லது நடிகை பங்கேற்பார்கள். இந்த ஆண்டு 75வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி, நியூயார்க்கில் ஆகஸ்ட் 21ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. வழக்கமாக ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்பார்கள். இந்த முறை 75வது சுதந்திர தின விழா என்பதால், லட்சம் பேர் பங்கேற்கும் விதமாக பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புஷ்பா படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறார் அல்லு அர்ஜுன். இதனால் இந்த முறை பேரணிக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். அவரும் இதில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

Related Stories: