சென்னை: யோகிபாபு நடித்த ‘ட்ரிப்’, ‘தூக்குதுரை’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத், கிராமத்துப் பின்னணியில் இயக்கி இருக்கும் படம், ‘மனிதன் தெய்வமாகலாம்’. செல்வராகவன், கவுசல்யா, குஷி ரவி, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.கே.பிரியன் இசை அமைத்துள்ளார். வியோம் என்டர்டெயின்மென்ட் சார்பில் விஜயா சதீஷ், ஆர்.எஸ் சதீஷ் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் ஏப்ரலில் வெளியாக இருக்கிறது. படம் குறித்து டென்னிஸ் மஞ்சுநாத் கூறியது: தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான படம் இது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற மாதிரியான கதையை எழுதியிருக்கிறேன். கிராமத்தில் வெள்ளந்தியாக இருக்கும் செல்வராகவனுக்கு காலம் கடந்து திருமணம் நடக்கிறது. அன்பான அவரது குடும்பம் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு அரசியல் சம்பவம் அவரது குடும்பத்தை எப்படி மாற்றுகிறது. இதனால் அவர் என்ன செய்கிறார் என்பதை சொல்லியிருக்கிறேன்.
உண்மை சம்பவ கதையில் செல்வராகவன்
- செல்வராகவன்
- சென்னை
- டென்னிஸ் மஞ்சுநாத்
- யோகி பாபு
- கோசலைக்கும்
- குஷி ரவி
- மைம் கோபி
- ஒய்.ஜி.மகேந்திரன்
- ரவி வர்மா
- ஏ.கே. பிரியன்
- விஜய சதீஷ்
- ஆர்.எஸ். சதீஷ்
- வ்யோம் என்டர்டெயின்மென்ட்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
