பொன்விழா பாடகிக்கு திரையுலகினர் கவுரவம்

சென்னை: திரைத்துறையில் பொன்விழா சாதனை படைத்த பின்னணி பாடகி, கலைமாமணி சுஜாதா மோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடிகர் சிவகுமார், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரெஹானா, ஜேம்ஸ் வசந்தன், நடிகை வடிவுக்கரசு, நடிகர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கவுரவித்தனர். ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு நடத்திய மகளிர் தின விழாவில் திரையுலகினர் திரண்டிருந்தனர். அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானியும், எந்திர நுண்ணறிவு நிபுணருமான சங்கமித்ரா பண்டோபாத்யாய், இளம் சாதனையாளர் பிரிவில் இளம் வயதிலேயே உலக கேரம் சாம்பியன் பட்டம் வென்ற காஸிமா பாஷா, கல்வி பிரிவில் இந்தியாவின் முதல் திருநங்கை பேராசிரியர் என்.ஜென்சி, துணிச்சல் பிரிவில் இந்தியாவின் முதல் பெண் குதிரைபந்தய வீராங்கனை ரூபா சிங், பளு தூக்கும் சாம்பியன் 82 வயது பாட்டி கிட்டம்மாள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: