சென்னை: கென் கருணாஸ் இயக்குனராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகும் `யூத்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டனர். தனுஷ் பேசியதாவது: கருணாஸ் – க்ரேஸிடம் ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் எனக் கற்றுக் கொள்ளலாம். நல்ல மனசுள்ள பையனை வளர்ப்பது கஷ்டம். அப்படி ஒரு பிள்ளையை (கென்) வளர்த்திருக்கிறீர்கள். குடும்பப் பொறுப்பையும் கையில் எடுக்கும் பிள்ளையாக இருக்கிறான், எப்போது அப்படி ஒரு பிள்ளை வருகிறானோ, அவனுக்கு வெற்றி நிச்சயம் காத்திருக்கும். முன்பெல்லாம் நமக்கு முன்னால் வந்த நடிகர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள நினைப்போம். இப்போதெல்லாம் அடுத்து வரும் தலைமுறையினரைப் பார்த்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதைக் கற்க வேண்டும். இவர்களைப் பார்க்கும்போது நான் நிறைய நேரத்தை வீணாக்கிவிட்டேனோ எனத் தோன்றுகிறது. இவ்வாறு தனுஷ் பேசினார்.
