ரூ.48 கோடிக்கு பங்களா வாங்கினார் மாதுரி தீட்சித்

மும்பை: பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், ரூ.48 கோடிக்கு மும்பையில் பிரமாண்டமான ஒரு பங்களாவை வாங்கியுள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் பலபேர் கடந்த சில மாதங்களாக சொந்த வீடுகள், பங்களாக்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் நடிகைகள் மாதுரி தீட்சித், பல்லவி ஜோஷி மற்றும் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் புதிதாக சொத்துகள் வாங்கி யுள்ளனர். மும்பையில் லொவர் பேரலில் ரூ.48 கோடிக்கு பங்களா வாங்கியுள்ளார் மாதுரி தீட்சித். 5,384 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஜிம், மினி தோட்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சமீபத்தில் இந்த பங்களா வுக்காக பத்திரங்களைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார் மாதுரி தீட்சித். ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கி இருப்பவர், விவேக் அக்னி ஹோத்ரி. வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியால் ரூ.18 கோடிக்கு வீடு வாங்கிஇருக்கிறார். இப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷியும் அபார்ட்மென்ட் ஒன்றில் வீடு வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: