வீரன் ஆன ஆதி

மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம் படங்களில் நடித்த ஹிப்ஆப் தமிழா ஆதி அடுத்து நடிக்கும் படம் வீரன். ஏஆர்கே.சரவணன் இயக்குகிறார். ஆதி நடிப்பதோடு இசை அமைக்கிறார். இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கிறார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் தயாரிக்கிறார்கள், தீபக்  மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் தொடங்கி நடந்து வருகிறது. இது ஒரு பேண்டசி ஆக்‌ஷன் படம்.

Related Stories: