53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நேற்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் அன்னதானம், ரத்த தானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும் சமூக வலைத்தளங்களில் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியான தீனா, பில்லா, மங்காத்தா படங்கள் நேற்று ரீரிலீஸ் செய்யப்பட்டன. சில தியேட்டர்களில் ரசிகர்கள் படம் ஓடும் ஹாலிலே பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் அஜித்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கி அசத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிறந்த நாள் கேக்குடன் அருகில் டுகாட்டி பைக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் பைக் பந்தய வீரரான அஜித்துக்கு பைக்குகள் மீது தனி ஆர்வம் உள்ளது. அடிக்கடி அவர் பைக் பயணமாக பல்வேறு இடங்களுக்கு சென்றுவிடுவார். அதனால் அவருக்கு ₹27 லட்சம் மதிப்புள்ள டுகாட்டி பைக்கை ஷாலினி பரிசளித்து அசத்தியுள்ளார். ஓட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் இந்த பரிசை அவர் வழங்கியிருக்கிறார்.

The post 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: