குலசை தசரா திருவிழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா

உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 6ம்நாள் விழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் 6ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 8மணி மாலை 5.30மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,மாலை 3மணி முதல் மாலை 4மணி சமயசொற்பொழிவும், மாலை 5மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8மணிக்கு பட்டிமன்றமும், இரவு 9மணிக்கு சிம்மவாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்.

Advertising
Advertising

Related Stories: