ஐப்பசி மாத விசேஷங்கள்?

ஐப்பசி 1, அக்டோபர் 18  வியாழன்.

நவமி. திருவோண விரதம். மகா நவமி. திருவம்பல், பாபநாசம், குற்றாலம் தலங்களில் சிவபெருமான் பவனி. விஷு புண்ய காலம். சரஸ்வதி பூஜை. தேவகோட்டை மணி முத்தாறு நதிக்கு அவ்வூர் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளி விஷு உற்சவ தீர்த்தவாரி சேவை. மயிலாடுதுறை, திருவையாறு, தலைக்காவிரி ஆகிய தலங்களில் துலா ஸ்நானம் ஆரம்பம்.

ஐப்பசி 2, அக்டோபர் 19, வெள்ளி  

விஜய தசமி. ஷீரடி சாய்பாபா சமாதி தினம். சிங்கப் பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் பார்வேட்டை கரும்பூர் எழுந்தருளல். திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் வசந்த உற்சவ பங்களாவுக்குச் சென்று வன்னி மரத்தடியில் பார் வேட்டைக்கு எழுந்தருளல். சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம். தசரத லலித கெளரி விரதம். திருக்கோஷ்டியூர் ஸெளம்யநாராயணப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி.

ஐப்பசி 3, அக்டோபர் 20, சனி  

ஸர்வ ஏகாதசி. தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜ சோழன் 1033வது பிறந்த நாள்.  துளசி கெளரி விரதம்.

ஐப்பசி 4, அக்டோபர் 21, ஞாயிறு  

கோ துவாதசி. திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளல்.

ஐப்பசி 5, அக்டோபர்  22, திங்கள்  

திரயோதசி. ஸோம மகாபிரதோஷம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. தானபல விரதம்.

ஐப்பசி 6, அக்டோபர் 23, செவ்வாய்  

சதுர்த்தசி. திருவண்ணாமலை கிரிவலம் 23.10.2018 இரவு 10.48 PM முதல் 24.10.2018 இரவு 10.51 PM. சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல்.

ஐப்பசி 7, அக்டோபர் 24, புதன்  

பௌர்ணமி. அன்னாபிஷேகம். திருமூலர். கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் அன்னகூட்டு உற்சவம், வடலூர் சித்திவளாக கொடியேற்றம். சந்தான கோபால விரதம். கோமதி பூஜை. திருநெல்வேலி காந்திமதியம்மன் உற்சவாரம்பம்.

ஐப்பசி 8, அக்டோபர் 25, வியாழன்  

ஆஸ்வின பஹுள பிரதமை. நெடுமாறனார். தில்லை சிவகாமியம்மன் கொடியேற்றம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. தென்காசி உலகம்மை திருவீதி உலா.

ஐப்பசி 9, அக்டோபர் 26, வெள்ளி  

துவிதியை. கிருத்திகை. இடங்கழியார். தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதியுலா. திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேகம்.

ஐப்பசி 10, அக்டோபர் 27, சனி  

திருதியை. கிருத்திகை விரதம். சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீரங்கம் டோலோத்ஸவம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்.

ஐப்பசி 11, அக்டோபர் 28, ஞாயிறு  

வாஸ்து நாள். (ந.நே.கா. 7.42 மணி முதல் 8.10 மணி வரை). சதுர்த்தி விரதம். வீரவநல்லூர் மரகதாம்பிகை புறப்பாடு.

ஐப்பசி 12, அக்டோபர் 29, திங்கள்  

பஞ்சமி. திருப்பதி ஏழுமலையப்பன் உடையவருடன் புறப்பாடு. சங்கரன்கோயில் கோமதியம்மன் புறப்பாடு.

ஐப்பசி 13, அக்டோபர் 30, செவ்வாய்  

சஷ்டி. திருவாரூர் ஸ்ரீகமலைஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மஹாகுரு பூஜை பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

ஐப்பசி 14, அக்டோபர் 31, புதன்  

சப்தமி. சத்தியார். திருமெய்யம் சத்யமூர்த்தி பெருமாள் புறப்பாடு.

ஐப்பசி 15, நவம்பர் 1, வியாழன்  

அஷ்டமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ஐப்பசி 16, நவம்பர் 2, வெள்ளி  

நவமி. சிதம்பரம் வெள்ளி திருத்தேர். திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகன சேவை. தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதியுலா.

ஐப்பசி 17, நவம்பர் 3, சனி  

தசமி. காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் ஸ்ரீகாமாக்ஷி தபஸ் ஆரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ஐப்பசி 18, நவம்பர் 4, ஞாயிறு  

வைணவ ஏகாதசி. ஸ்ரீரங்கம் டோலோத்ஸவம். சிதம்பரம் ஸ்ரீ சிவானந்தநாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாணம்.

ஐப்பசி 19, நவம்பர் 5, திங்கள்  

மாத சிவராத்திரி, சோமவார பிரதோஷம். பின்னிரவு நரக சதுர்த்தசி ஸ்நானம்.

ஐப்பசி 20, நவம்பர் 6, செவ்வாய்  

நரக சதுர்த்தசி. தீபாவளிபண்டிகை. தீபாவளி நோன்பு. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

ஐப்பசி 21, நவம்பர் 7, புதன்  

அமாவாசை. கேதாரகெளரி விரதம். மெய்கண்ட தேவர்.மயிலாடுதுறை ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி. ஸ்ரீகங்கை அம்பாளுடன் புறப்பாடு. காவிரியில் தீர்த்தம்.

ஐப்பசி 22, நவம்பர் 8, வியாழன்  

பிரதமை. வேளூர், சீர்காழி, திருக்கடவூர், திருவையாறு, திருச்செந்தூர், பழனி தலங்களில் கந்த சஷ்டி உற்சவாரம்பம்.

ஐப்பசி 23, நவம்பர் 9, வெள்ளி   

யம துவிதியை. பூசலார்.

ஐப்பசி 24, நவம்பர் 10, சனி  

திரிதியை. திருவஹிந்திரபுரம் திருத்தேர்.

ஐப்பசி 25, நவம்பர் 11, ஞாயிறு  

சதுர்த்தி. ஐயடிகள் காடவர்கோன். குமார வயலூர் முருகப் பெருமான் கஜமுகாசுரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். அன்ன வாகனத்தில் புறப்பாடு.

ஐப்பசி 26, நவம்பர் 12, திங்கள்  

பஞ்சமி. குமாரவயலூர் முருகப் பெருமான் சிங்கமுகாசுரனுக்கு பெருவாழ்வு அருளல். வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

ஐப்பசி 27, நவம்பர் 13, செவ்வாய்  

ஸ்கந்த சஷ்டி  சூரஸம்ஹாரம். திருஇந்தளூர் பரிமளரங்கர் யானை வாகனத்தில் திருவீதியுலா.

ஐப்பசி 28, நவம்பர் 14, புதன்  

சப்தமி. திருவோண விரதம். பொய்கையாழ்வார். திருமலை திருப்பதி புஷ்ப யாகம், காஞ்சி ஸ்ரீ குமரக் கோட்டம், குமரன் குன்றம் ஸ்ரீஸ்கந்தர் திருக்கல்யாணம்.

ஐப்பசி 29, நவம்பர் 15, வியாழன்  

அஷ்டமி. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பூதத்தாழ்வார். வேளூர் ஸ்ரீவள்ளியம்மை திருக்கல்யாணம்.

ஐப்பசி 30, நவம்பர் 16, வெள்ளி  

அட்சய நவமி, கடைமுகம், மயிலாடுதுறை, திருவையாறு, தலைக்காவிரி ஆகிய தலங்களில் துலாஸ்நான உற்சவ பூர்த்தி. சுவாமிமலை முருகப் பெருமான் இடும்ப வாகனத்தில் புறப்பாடு. பேயாழ்வார்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

Related Stories: