ஜூலைக்கு தள்ளிப்போகும் மாதவனின் ‘ராக்கெட்ரி’

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன் தயாரித்து நடிக்கும் படம் 'ராக்கெட்ரி'. மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இப்படத்தில் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படம் முழுமையாக தயாராகி விட்டது. வருகிற ஏப்ரல் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரும் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இடையில் பல பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் இந்த படத்தை மாதவன் தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: