சந்தானத்தை இயக்கும் கன்னட நடிகர்

சந்தானத்தின் 15வது படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். இது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 15வது படமாகும். பிரசாந்த் ராஜ் கன்னடத்தில் லவ் குரு, கானா பஜானா, ஜூம், ஆரஞ்சு படங்களை இயக்கியவர்  சபாபதி படத்திற்கு பிறகு சந்தானம் தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு இந்த படத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து பிரசாந்த் ராஜ் கூறியிருப்பதாவது: சந்தானம் நடிப்பில் எனது புதிய படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி. இந்த படம் ஒரு தனித்துவமான காமெடி கலந்த காதல் படமாக  இருக்கும். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும். என்கிறார். படத்தை ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

Related Stories: