ஓடிடியில் வெளியாகிறது பேச்சுலர்

புதுமுகம் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான படம் பேச்சுலர்.  இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் பேனரில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படம் வெளியாகி 45 நாட்கள் கடந்த நிலையில் வருகிற 21ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இது லவிங் டூ கெதர் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம்.

Related Stories: