தயாரிப்பாளர் முத்துராமன் மரணம்

சென்னை: சினிமா தயாரிப்பாளர் எம். முத்துராமன் இன்று காலமானார். அவருக்கு வயது 83. ராஜமரியாதை, மூடு மந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உள்பட 26 படங்களுக்கு மேல் தயாரித்தவர் முத்துராமன். சென்னை தி.நகரிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். வயது காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி, மகள் உள்ளனர். இன்று மதியம் உடல் அடக்கம் நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: