கல்லூரி நண்பர்களை சந்தித்த மம்முட்டி

மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி சட்டம் படித்த வழக்கறிஞர், அதற்கு முன்பாக எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில்  எம்.ஏ படித்தார். இந்த கல்லூரியில் மம்முட்டியுடன் நடித்த மாணவர்களின் ரியூனியன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்ததது. 70 வயதான நடிகர் மம்முட்டி தனது கல்லூரி நண்பர்களை சந்தித்து உரையாடினார். அவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிலேயே மம்முட்டி மிகவும் இளமையாக தெரிந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories: