கபில்தேவ் படத்துக்கு வரி விலக்கு: டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் குறித்த படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி சம்பவத்தை அடிப்படையாக வைத்து பல மொழிகளில் உருவாகியுள்ள படம், ‘83’.

கபீர் கான் இயக்கியுள்ள இதில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங், கபில்தேவ் மனைவி ரோமி பாட்டியா வேடத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளனர்.  1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் காந்த் கேரக்டரில் ஜீவா நடித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் ‘83’ படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Related Stories: