அபர்ணாவின் திடீர் ஆர்வம்

மலையாள நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தமிழில் நடிக்க அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காரணம், இங்கு அதிக சம்பளம், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, படப்பிடிப்பில் கேரவன், உதவியாளர்களுக்கு சம்பளம் போன்ற பல சலுகைகள் கிடைப்பதுதான். அவரது நடிப்பில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், தீதும் நன்றும், சூரரைப்போற்று ஆகிய படங்கள் வெளியானது. தற்போது ஆர்ஜே பாலாஜியுடன் வீட்ல விசேஷங்க, கார்த்தியுடன் ஒரு படம், அசோக் செல்வனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மலையாளத்தில் உருவாகும் சுந்தரி கார்டன்ஸ் என்ற படத்தில், காமெடி நடிகர் நீரஜ் மாதவ் ஜோடியாக நடித்து வருகிறார். காமெடி, குணச்சித்திரம் உள்பட பலவிதமான கேரக்டர்களில் நடித்து வரும் நீரஜ் மாதவ், தி பேமிலி மேன் முதல் சீசனில் வில்லன் வேடத்தில் நடித்தார். தற்போது சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சுந்தரி கார்டன்ஸ் படத்தை சார்லி டேவிஸ் இயக்குகிறார்.

Related Stories:

More