வெற்றிக்கு டும் டும் டும்

இயக்குனர்களின் ஹீரோவாக மாறி ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘கேர் ஆஃப் காதல்’, ‘வனம்’ ஆகிய படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தவர், வெற்றி. இப்போது ‘மெமரீஸ்‘, ‘ஜோதி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ‘ஜீவி’ படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கிறார். இப்படத்தை  ‘மாநாடு’ சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்நிலையில் வெற்றிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை வரும் ஜனவரி 20ம் தேதி திருமணம் செய்கிறார்.

Related Stories:

More