போனி கபூர், ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடிப்பேன் என்று தன் தோழிகளிடம் சொல்லி இருக்கிறார். மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தால், இங்குள்ள மீனாவின் வீட்டுக்கு விஜயம் செய்யும் ஜான்வி கபூர், தமிழில் எப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தால் முன்னணி இடம் பிடிக்க முடியும் என்பது உள்பட பல விஷயங்களுக்கு அவரிடம் ஆலோசனை கேட்கிறார்.