பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்த பின்னர் சென்னை தி நகரில் சொந்தமாக "இளையராஜா ஸ்டுடியோ" என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.