வெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி

வெற்றிமாறனுக்கும், அவரது இயக்கத்தில் நடிப்பவர்களுக்கும் சில நேரங்களில் ஏழாம் பொருத்தம் ஆகிவிடுகிறது. ஆடுகளம் படத்தில் முதலில் தனுஷ் ஜோடியாக நடித்தவர், திரிஷா. திடீரென்று அவர் நீக்கப்பட்டு டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படி ஒவ்வொரு வெற்றிமாறன் படத்திலும் முதலில் ஒருவர், பிறகு வேறொருவர் நடிப்பது வழக்கமாகி விட்டது. அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படம் உருவானபோது, முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். 

ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விஜய் சேதுபதி சென்றபோது, எதையோ மனதில் வைத்துக்கொண்டு தனுஷ் வராமல் சில நாட்களைக் கடத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால் டென்ஷனான விஜய் சேதுபதி, சில நாட்களிலேயே அப்படத்தில் இருந்து விலகினார். பிறகு அந்த வேடத்தில் இயக்குனர் அமீர் நடித்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு பெயரிடவில்லை. இதில் சூரி ஜோடியாக பவானிஸ்ரீ நடிக்கிறார். 

இவர், விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் அறிமுகமானவர். வெற்றிமாறன் படத்தில் முக்கிய கேரக்டரில் இயக்குனர் பாரதிராஜா ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் நடப்பதால், தன் உடல்நிலையைக் காரணம் காட்டி நடிக்க மறுத்துவிட்டார். 

இதனால், ஆடுகளம் கிஷோரை நடிக்க வைத்தார் வெற்றிமாறன். தற்போது அவரும் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்படுகிறது.

Related Stories:

>