சஞ்சனா ஸ்கூபா டைவிங்

திரிஷா, ஹன்சிகா, சமந்தா, அமலா பால், ரகுல் பிரீத் சிங், சஞ்சிதா ஷெட்டி, பிரனீதா உள்பட சில நடிகைகள் கோவா அல்லது வெளிநாடுகளுக்கு சென்றால், அங்குள்ள கடல் பகுதியில் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு, அந்த போட்டோக்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, ‘நாங்கள் மிகவும் துணிச்சலான பெண்கள்’ என்று பிரபலப்படுத்திக் கொள்வது வழக்கம். தற்போது அந்த வரிசையில் சேர்ந்துள்ளார், சஞ்சனா சிங். அடிக்கடி வெளிநாடு சென்று வரும் அவர், சமீபத்தில் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு கோவா சென்றார். 

அங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர், இதுவரை இல்லாத அளவுக்கு பிகினி உடையணிந்து கொடுத்த போஸ், இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் மேற்கொண்ட சாகச வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளியூர் சென்றிருந்த சஞ்சனா சிங், திடீரென்று தென்னை மரத்தில் சரசரவென்று ஏறி இறங்கிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>