ஹீரோயின்களுக்கு பேசிய ஹீரோயின்

நயன்தாரா, சமந்தா, எமி ஜாக்சன், அமலா பால் உள்பட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி வருபவர், ரவீணா ரவி. இவர், பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் அம்மா வேட நடிகை ஸ்ரீஜாவின் மகள். ரவீணாவின் தந்தை ரவியும் டப்பிங் பேசுவார், நடிப்பார். பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்புசட்டை படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்துக்காக, சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் ஜோடியாக நடிக்க குடும்பப்பாங்கான நடிகையை தேடியபோது கிடைத்தவர், ரவீணா. 

சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்திலும் நடித்திருந்தார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிடும் ராக்கி என்ற படத்தில், வசந்த் ரவி ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்திலும் ஓரிரு படங்களில் நடிக்கிறார். 
ஆனால், டப்பிங் பேசுவதை அவர் நிறுத்தவில்லை. தற்போது அவர் இரண்டு ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ள மூன்று படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது. விஜய் நடித்த மாஸ்டர் படம், வரும் 13ம் தேதி ரிலீசாகிறது. 

இதில் மாளவிகா மோகனனுக்கு ரவீணா டப்பிங் பேசியுள்ளார். வரும் 14ம் தேதி சிம்பு நடிப்பில் ரிலீசாகும் ஈஸ்வரன் படத்திலும், ஜெயம் ரவி நடிப்பில் ஓடிடியில் வெளியாகும் பூமி படத்திலும் நிதி அகர்வாலுக்கு டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் துறையில் ரவீணாவுக்கு அமைந்தது போன்ற அதிர்ஷ்டம் யாருக்கும் அமைந்ததில்லை என்று சொல்கிறார்கள்.

Related Stories:

>