தெலுங்கு படத்தில் ஆர்யா வில்லன்

ஆனந்த் சங்கர் இயக்கி வரும் எனிமி என்ற படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிக்கும் புஷ்பா படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி இருக்கிறது. இதற்கு முன்பு விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரிடம் இப்படத்துக்காக பேசப்பட்டது. ஆனால், வெவ்வேறு காரணங்களை சொல்லி நடிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, இதுபற்றி யாரும் தன்னிடம் பேசவில்லை என்று தெரிவித்தார். தற்போது டெடி, அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை ஆகிய தமிழ்ப் படங்களில் ஆர்யா ஹீரோ வாக நடித்து வருகிறார்.

Related Stories:

>