பாலிவுட் செல்கிறார் ராஷ்மிகா

தமிழ், தெலுங்கை தொடர்ந்து இந்தி படத்தில் அறிமுகமாக உள்ளார் ராஷ்மிகா. தெலுங்கில் பல படங்களில் நடித்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இந்தியில் உருவாகும் மிஷன் மஜ்னு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.

1970ல் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகிறது. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்கிறார். கதைப்படி அவருக்கு ரா ஏஜென்ட் கேரக்டர். அவருக்கு உறுதுணையாக இருக்கும் வேடத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். நிஜ சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை சாந்தனு பக்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இது குறித்து ராஷ்மிகா கூறும்போது, ‘மொழி எப்போதும் எனது திறமையை வெளிப்படுத்த தடையாக இருந்ததில்லை. அதனால்தான் கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்தேன். இப்போது இந்தியில் நடிக்கிறேன்’ என்றார்.

Related Stories:

>