விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் தீபாவளிக்கு திரைக்கு வராது என அப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் வரும் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு மாஸ்டர் படம் திரைக்கு வருமா என கேள்வி எழுந்தது.