நடிகர் அர்ஜுன் கபூருக்கு கொரோனா: மலாய்க்கா அரோராவுக்கும் பரிசோதனை

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது காதலியான மலாய்க்கா அரோராவுக்கும் பரிசோதனை நடத்த உள்ளனர். இந்தி சினிமா தயாரிப்பாளரான போனிகபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூர். பல இந்தி படங்களில் நடித்துள்ளார். கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் இவர் பரிசோதனை மேற்கொண்டார். இதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. ‘லேசான அறிகுறிகளுடன் நலமாக இருக்கிறேன். 

வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது உடல்நிலை குறித்த விவரங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு தெரிவிப்பேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என கூறியுள்ளார்.  நடிகை மலாய்க்கா அரோராவை அர்ஜுன் கபூர் காதலித்து வருகிறார். இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து மலாய்க்காவுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உள்ளனர்.

Related Stories: