மகுடம் படத்தின் இயக்குனரானது ஏன்..? விஷால் அறிக்கை

சென்னை: விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகும் படம், ‘மகுடம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். ரவி அரசு, ‘மகுடம்’ படத்தை எழுதி இயக்கி வந்தார். ஆனால், இப்போது இப்படத்தை தானே இயக்குவதாக நேற்று முன்தினம் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கை வருமாறு:
தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக, என்னை இப்படத்தில் கிரியேட்டிவாக மறுவேலைகள் செய்ய வைத்து, நானே இயக்கும் இடத்துக்கு கொண்டு வந்துள்ளன. கட்டாயத்தினால் அல்ல, பொறுப்புணர்வால் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். இப்போது இந்த ‘மகுடம்’ படத்தின் இயக்குனர் பொறுப்பை ஏற்பதுதான், தயாரிப்பாளரின் முயற்சிகள் பாதுகாக்கப்படுவதையும், வணிக சினிமாவில் பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதையும் உறுதி செய்ய சரியான முடிவாகும். சில நேரங்களில், சரியான முடிவை எடுப்பது என்பது பொறுப்பை ஏற்றுக்கொள்வது. இதுதான் இந்த தீபாவளி எனக்கு உணர்த்துகிறது.

Related Stories: