25வது படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

1996ல் தெலுங்கில் வெளியான ராம்பந்து படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். பிறகு தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்தார். இந்நிலையில் அவர் நடிக்கும் 25வது படம், பூமிகா. ஏற்கனவே அவருடைய நடிப்பில் இன்னும் திரைக்கு வராத, இது வேதாளம் சொல்லும் கதை என்ற படத்தை இயக்கியுள்ள ரதீந்தரன் ஆர்.பிரசாத் இயக்குகிறார். 

ஒளிப்பதிவு, ராபர்டோ ஜாஜாரா. இசை, பிருத்வி சந்திரசேகர். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையுடன் படம் உருவாகியுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார். 

Related Stories: