இந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகை?

தெலுங்கில் வெங்கி மாமா உள்பட சில படங்களில் நடித்தவர் பாயல் ராஜ்புத். இந்தியிலும் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என்றும் இதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவாகும் புஷ்பா படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்றும் தகவல் பரவியது. இணையதளங்களில் இந்த தகவல் பரவியதால் இது பற்றி பலரும் பாயலிடம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும்போது, எதற்காக அடுத்தடுத்து 2 படங்களில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாய் என கேட்டார்களாம். 

இது பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதில் கூறியுள்ளார் பாயல். அவர் கூறும்போது, ‘இந்தியன் 2 படத்திலும் புஷ்பா தெலுங்கு படத்திலும் நான் ஒரு பாட்டுக்கு ஆடப்போவதாக சொல்லும் தகவல் உண்மை கிடையாது. இந்த படங்களுக்காக யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இது முழுக்க முழுக்க வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம்’ என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: