பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் முடக்கம்

மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, தற்போது தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாகவும், இந்தியில் சல்மான் கான் ஜோடியாகவும் பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிலர் முடக்கி உள்ளதாகவும், அதை தனது டிஜிட்டல் டீம் மீட்க போராடி வருவதாகவும், எனவே அதிலிருந்து வரும் எந்தவொரு அழைப்பையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும், அந்த கணக்கில் இருந்து யாராவது தகவல் கேட்டால், அதை அனுப்ப வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு டிவிட்டை பதிவு செய்த பூஜா ஹெக்டே, கடந்த சில மணி நேரங்களாக இருந்த பதட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், தனது டெக்னிக்கல் டீம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்டு கொடுத்துவிட்டதாகவும், அவர்களுக்கு தன்னுடைய நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: