பிரபாஸ் படத்தில் வில்லன் ஆனார் அரவிந்த் சாமி

பல படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் அரவிந்த் சாமி. நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். இப்போது நடித்தும் வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் உருவாகும் படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இவர், கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளார். ஊரடங்குக்கு பின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Related Stories: