காஸ்டியூம் டிசைனராக மாறியுள்ளார் நடிகை அம்ரிதா அய்யர். விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்தவர் அம்ரிதா அய்யர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது லிப்ட் படத்தில் கவின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்குக்கு முன்பாக நடந்தது. அப்போது படத்தில் காஸ்டியூம் டிசைனராக அம்ரிதா பணியாற்றியுள்ளார்.