படம் பார்க்க பா.ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்த இயக்குனர்

ஆணவகொலை பற்றிய படமாக பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் உருவானது. இந்நிலையில் மோகன்.ஜி இயக்கிய திரவுபதி என்ற படமும் ஆணவ கொலை படமாக உருவானது. இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இரு சமூகத்தினரை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதால் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் திரவுபதி படம்பற்றி பா.ரஞ்சித்திடம் ஒரு விழாவின்போது கருத்து கேட்டபோது, ‘அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது’ என பதில் அளித்திருந்தார்.  

சில தினங்களுக்கு முன் திரவுபதி படத்தின் சிறப்பு காட்சி அரசியல் கட்சி தலைவர்களுக்கு திரையிடப்பட்டது. படம் திரையிட்ட தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. இந்நிலையில் திரவுபதி படத்தின் தயாரிப்பாளர் கோபி, இயக்குனர் பா.ரஞ்சித்தை டேக் செய்து ஒரு டிவிட்டர் மெசேஜ் வெளியிட்டுள்ளார். அதில் ‘நீங்கள் திரவுபதி படத்தை பார்க்க வரவேண்டும். உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் டிவிட்டர் மூலமாக அழைக்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த மெசேஜை பா.ரஞ்சித்துக்கு டேக் செய்து இயக்குனர் மோகன்.ஜி வெளியிட்ட மெசேஜில், ‘நானும் அன்புடன் அழைக்கிறேன் என் சகோதரனை’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: