கேத்ரினா தெரசாவை திருமணத்துக்கு நெருக்கும் குடும்பம்

மெட்ராஸ், கணிதன், கதகளி, கடம்பன் போன்ற படங்களில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா தற்போதைக்கு தமிழ் தெலுங்கில் கைவசம் எதுவும் இல்லாமலிருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் வேல்ர்ட் பேமஸ் லவர் படத்தில் நடித்தார். இப்படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்த்தார். இதனால் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் 1 கோடி சம்பளத்துடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார்.

இதற்கிடையில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தபடம் தோல்வி அடைந்தது. படத்தை திரையிட்டவர்கள் விஜய்தேவர கொண்டாவிடம் நஷ்ட ஈடு கேட்டு வருகின்றனர். கேத்ரின் தெரசாவை திருமணம் செய்துகொள்ளும்படி அவரது குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர் நழுவிச் செல்கிறார்.

இதுகுறித்து கேத்ரின் கூறும்போது,’எனது குடும்பத்தினர் எனக்கு திருமணம் செய்து வைக்க காத்திருக்கின்றனர். எனக்கும் அதுபற்றி பிரஷர் தந்துக்கொண்டி ருக்கிறார்கள். நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படியொரு நபரை சந்திக்கவும் இல்லை. குடும்பத்தினர் பார்க்கும் திருமணமா? காதல் திருமணமா? என்று எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எப்படியிருந்தாலும் எனது நடிப்பு தொழிலை விரும்புபவராக இருக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: