டியர் காம்ரேட் படத்தில் விஜய தேவரகொண்டாவுடன் நடித்த ராஷ்மிகா தற்போது தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா வுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அதேபோல் அவருக்கு வரும் சர்ச்சைகளும் அதிகம். கடந்த மாதத்தில் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப் பட்டது பரபரப்பானது. அதுபற்றி கவலைப்படாமல் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் தனது புகைப் படங்களை அடிக்கடி வெளியிட்டு குஷிபடுத்தும் அவர் சமீபத்தில் வித்தியாச மான போட்டோ ஷூட் நடத்தினார்.