34 வருடத்துக்கு பிறகு கமலின் லிப் டு லிப் முத்தம் சர்ச்சையானது

கமல்ஹாசன், ரேவதி, ரேகா இணைந்து நடித்த படம் புன்னகை மன்னன். கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். கடந்த 1986ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. அதை கிளப்பிவிட்டவர் அப்படத்தில் நடித்த ரேகா. கதைப்படி கமல், ரேகா இருவரும் தற்கொலை செய்யும் முன் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டது. ரேகாவுக்கு கமல் உதட்டில் அழுத்தமாக முத்தம் தருவார்.

படம் வெளியானபோதே இதுபற்றி ரேகாவிடம் கேட்டபோது,’ என் சம்மதம் இல்லாமல் இக்காட்சியை படமாக்கிவிட்டார்கள்’ என்றார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் இதுபற்றி குறிப்பிட்டார் ரேகா. அவரது பேட்டி இணைய தளத்தில் வெளியாகி சர்ச்சை யாகி இருக்கிறது. இதையொரு மீடு விவகாரம்போல் சிலர் சித்தரிக்கத் தொடங்கியதுடன் கமல் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கமென்ட் பகிர்ந்தனர்.

இதுகுறித்து ரேகாவிடம் கேட்டபோது,’இந்த விவகாரத்தில் யாருக்கும் எதிராக நான் பேட்டி அளிக்கவில்லை. இதை சர்ச்சையாக்கவும் விரும்பவில்லை. யாரும் வருத்தம் தெரிவிக்கவும் வேண்டியதில்லை. கே.பாலசந்தர், கமல்ஹாசன் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

புன்னகை மன்னன் படத்திற்கு பிறகுதான் எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தப் படத்திற்கு பின் நான் கவனமாக இருந்தேன். சிலர் என்னை கவர்ச்சியாக நடிக்க கேட்ட போது நடிக்க மறுத்துவிட்டேன். எப்படியோ ஒருவழியாக என்னை நயன்தாரா போல் பரபரப்பாக்கி விட்டார்கள். கமல், ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று எண்ணுகிறேன்’ என்றார்.

Related Stories: