சினிமா கிறுக்கன்

சென்னை: மகிழ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், சி.பியூலா தயாரிப்பில், தக்‌ஷன் விஜய் எழுத்தில் உருவாகும் ‘சினிமா கிறுக்கன்’ படத்தை, சமூக விரோதி, பொதுநலன் கருதி ஆகிய படங்களை இயக்கிய சீயோன் ராஜா இயக்குகிறார்.கதாநாயகன் தக்‌ஷன் விஜயின் அப்பாவாக பிரபல இயக்குனர் ஜி.ம்.குமார் நடிக்கிறார். அம்மாவாக தனுஷின் அம்மாவாக கர்ணன் படத்தில் நடித்த வாழை ஜானகி நடிக்கிறார். அமுதவாணன், ஜீவா, சாகிதா சுகன்யா, விதுஷ்னியா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனத்தை தக்‌ஷன் விஜய் எழுதுகிறார். ஒளிப்பதிவு – வினு பெருமாள், இசை – ஷ்யாம்.

Related Stories: