ஷுட்டிங்கை நிறுத்திய அஜீத்

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி ஐதராபாத்தில் நடந்தது. அஜீத் நடித்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் ஹீரோயினாக நடிப்பது யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. நயன்தாரா தொடங்கி நஸ்ரியா வரை பெயர்கள் அடிபட்டன. கடைசியாக காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹூமா குரோஷியில் வந்து நிற்கிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பை ஒரு மாதத்துக்கு தள்ளிவைத்திருக்கிறார்களாம். அஜீத்குமார் தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்டுபவர். ஐஐடி மாணவர்களுக்கு குட்டி விமானம் இயக்குவதுபற்றி பயிற்சி அளித்தவர், பின்னர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். இந்நிலையில் ஹெலிகேம் ஆராய்ச்சியில் அஜீத் ஈடுட்டிருக்கிறாராம். இதற்கிடையில் நேரம் கிடைக்கும்போது படப்பிடிப்பில் பங்கேற்பதாக இயக்குனரிடம்  தெரிவித்திருக்கிறாராம்.

Related Stories: