மிரட்சியில் கோவா உண்மை சம்பவம்

டேக் ஓ.கே சினிமாஸ் சார்பில் பி.ராஜன் தயாரித்துள்ள படம், மிரட்சி. வில்லனாக ஜித்தன் ரமேஷ், பாலிவுட் நடிகை ஸ்ரத்தா தாஸ், கொல்கத்தா அழகி இனாசஹா, அஜெய் கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, வி.ரவி. இசை, ஆனந்த். பாடல்கள், வசனம்: என்.ரமேஷ். இயக்கம், எம்.வி.கிருஷ்ணா. அவர் கூறியதாவது:

தன் காதலுக்கு எதிராக இருக்கும் அம்மாவை மீறி, தன்னை உயிராக நேசிக்கும் ஹீரோவின் காதலை ஏற்க முயற்சிக்கிறார் ஹீரோயின். இந்நிலையில், பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோவிடம் சிக்கிக்கொள்கிறாள். பிறகு என்ன நடந்தது என்பது கதை. கோவாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படமாக்கியுள்ளேன்.

Related Stories: