தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும் ஆகிய படங்களை தொடர்ந்து ஹரி உத்ரா இயக்கியுள்ள படம், கல்தா. மேற்குத்தொடர்ச்சி மலை ஆண்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், ராஜசிம்மன் நடித்துள்ளனர். படம் குறித்து ஹரி உத்ரா கூறியதாவது: அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை தங்களுடைய குப்பைத்தொட்டியாக நினைத்து, அவர்களுடைய மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாகவும், திருட்டுத்தனமாகவும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றன.