ஹீரோயின் கணவர் மீது கவர்ச்சி நடிகை போலீசில் புகார்

பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. 2011ம் ஆண்டு உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு கிரிக்கெட் வாரியம் அனுமதி தரவில்லை. நாஷா இந்தி படத்தில் நடித்த பூனம் தெலுங்கில் மாலினி அண்ட் கோ  படத்தில் நடித்தார். படங்களில் நடிப்பது என்னவோ குறைவுதான் சமூக வலைதளங்களில்தான் இவரது சேட்டை தாங்க முடியவில்லை.

எந்நேரமும் டூ பீஸ், டாப் லெஸ், குளியல் காட்சி என படுகவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு பில்டப் தருகிறார். பூனம் கவர்ச்சியை காண ஒரு கூட்டமே இணைய தளத்தில் அவரை பின்தொடர்கிறது. இந்நிலையில் தனது புகைப்படங்களை நெட்டில் வெளியிடுவதற்காக மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்தார் பூனம். வரும் வருமானத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு எடுத்துக்கொள்வது என்பதில் இருதரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டது. தனக்கு குறைந்த அளவிற்கான பங்கு தர மட்டுமே அந்நிறுவனம் முன்வந்ததால் அதை ஏற்காமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஆனாலும் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பூனமிற்கு தொடர்ந்து தொலைபேசி வாயிலாக தொல்லை தரப்பட்டதாம்.

குறிப்பிட்ட நிறுவனத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தராவும் பங்குதாரராக இருப்பதால் அவர் மீது போலீசில் புகார் செய்தார் பூனம் பாண்டே. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குந்தரா, ‘என்னை பூனம் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். குறிப்பிட்ட நிறுவனத்தில் நான் பங்குதாரர் இல்லை. என்னிடமிருந்த பங்குகளை நீண்ட நாட்களுக்கு முன்பே வேறு நபருக்கு விற்றுவிட்டேன். பூனம்மை எந்தவிதத்திலும் நான் தொந்தரவு செய்யவில்லை. என் மீது பொய்யான புகார் தரப்பட்டிருக்கிறது’ என்றார்.

Related Stories: