தக்‌ஷன் விஜய் படத்தில் சாந்தினி

தங்கைக்காக வாழும் அண்ணனின் கதையுடன் குடும்ப பாசம், சென்டிமெண்ட் கலந்து, முழுநீள ஜனரஞ்சகமான படமாக ‘வெற்று காகிதம்’ உருவாகிறது. மகிழ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரிக்கிறார். இப்படம் மகிழ் குழுவினர் இயக்கத்தில் உருவாகிறது.

தக்‌ஷன் விஜய், சாந்தினி, அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா நடிக்கின்றனர். திலீபன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக், சீனு அரங்கம் அமைக்கின்றனர். கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ் இணைந்து சண்டைப் பயிற்சி அளிக்கின்றனர். பழநி, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

Related Stories: