பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும் நடித்த நிவேதா தாமஸ், தற்போது இந்தி பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். பவன் கல்யாண், அஞ்சலி, அனன்யா நாகல்லா நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக்கான படத்தில் அஜீத், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தனர்.