தனுஷ் படத்தில் சாரா அலிகான்

இந்தியில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்தார் தனுஷ். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். கடைசியாக ஷாருக்கான் நடித்த ஜீரோ படத்தை ஆனந்த் ராய் இயக்கினார். இப்போது மீண்டும் தனுஷ் நடிக்கும் இந்தி படத்தை அவர் இயக்க உள்ளார். ஜூன் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

இதில் தனுஷ் ஜோடியாக சாரா அலிகான் நடிக்க தேர்வாகியுள்ளார். படத்தில் பீகார் பெண்ணாக அவர் நடிக்கிறாராம். இதே படத்தில் அக்‌ஷய்குமாரும் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் முக்கிய லீட் கேரக்டரில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது. ராஞ்சனா, ஷமிதாப் படங்களுக்கு பிறகு தனுஷ் நடிக்கும் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: