கின்னஸ் படத்தில் உயிர் பெறும் தலைவர்கள்

கின்னஸ் சாதனை முயற்சியாக உருவாகிறது வங்காள விரிகுடா படம். ஹீரோ உள்ளிட்ட 21 பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் குகன் சக்ரவர்த்தியார். படம் பற்றி அவர் கூறியதாவது: பொருள் இல்லாததால் வாலிபனை விட்டு பிரிகிறாள் இளம்பெண். அதை ஒரு சபதமாக  ஏற்று வாழ்வில் பெரும் பொருளையும், புகழையும் ஈட்டும் வாலிபன் மறைந்த அப்துல்கலாம் வாழ்க்கையை பின்பற்றி எப்படி உயர்ந்த இடத்தை பிடிக்கிறான் என்பதை படம் விளக்குகிறது.

அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா நினைவிடங்களிலும் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்திலும் மேலும் பல தலைவர்களின் நினைவிடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. மறைந்த தலைவர்கள் இதில் உயிர்பெறுகிறார்கள். பரந்து விரிந்த வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், ஒளிப்பதிவு, பாடகர், இசை, பின்னணி இசை, அரங்கம், நடனம், ஸ்டண்ட் உள்ளிட்ட 21 பொறுப்புகளை இப்படத்தில் ஏற்றிருக்கிறேன். ஜெயஸ்ரீ ஹீரோயின். பிரபாத், அலினா ஷேக், பொன்னம்பலம், அலிசா, வாசுவிக்ரம், மஞ்சு, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

Related Stories: