நடிகை அமலாபால் தந்தை பால் வர்கீஸ் நேற்று காலமானார். அவரின் இறுதிச் சடங்கு நாளை மாலை 3 மணிக்கு கேரளா, குருப்பம்பாடியில் உள்ள செயிண்ட் பீட்டர், செயிண்ட் பால் கத்தோலிக் சர்ச் வளாகத்தில் நடைபெற இருக்கிறது. தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் அமலா பால். தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தைப் பார்த்த பலரும் அமலாபாலின் துணிச்சலான நடிப்பை பாராட்டினர்.