மலைய மறைக்க முடியாது; லாரன்ஸ் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அதாவது கடந்த 9ம் தேதி வெளியானது. போட்டிக்கு எந்த படமும் இல்லாத நிலையில் தர்பார் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அள்ளியது. வெளியான ஒரு சில நாட்களில் 150 கோடி வசூல் எட்டியதாக பட நிறுவனம் அறிவித்தது. ஆனால்  தர்பார் படம் வசூல் குறைந்துவிட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினர்.

அதைக்கண்டு கோபம் அடைந்த நடிகர் ராகவா லாரன்ஸ், அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘தர்பார் படம் சரியாக ஓடவில்லை. படத்திற்கு வசூல் குறைவாகவே வந்துள்ளது என சிலர் திட்டமிட்டு பொய் பரப்பினாலும் தர்பார் படம் பாக்ஸ் ஆபிசில் பெரும் வசூலை ஈட்டியுள்ளது. இலைய கைல மறைக்கலாம், ஆனா மலைய மறைக்க முடியாது. மலைடா அண்ணாமலை.. அந்த ஆண்டவனே நம்ப பக்கம்’ என தெரிவித்திருக்கிறார்.

Related Stories: